நபிகள் நாயகம் மறைந்த தினம்
இஸ்லாத்தை உருவாக்கிய ரசூல் அல்லாஹ் முகம்மது நபி என அழைக்கப்படும் நபிகள் நாயகம் மறைந்த தினம் இன்று ஜூன் 8, 632.. இவரே தமது வாழ்நாளில் அராபியத் தீபகற்பம் முழுமையும் இஸ்லாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முஸ்லிம்கள் முகம்மது நபியை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர்.
நபிகள் நாயகத்தின் கல்லறை இருப்பது அல்-மஸ்ஜித் அந்-நபவி, மதீனா, சவூதி அரேபியா
நபிகள் நாயகம் தனது இறுதிப் பேருரையில் கூறியது:
“அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்க்கின்ற வழிகெட்டவர்களாய் - இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்”.
(ஸஹீஹுல் புகாரி 4403)
Comments