முகமது அலி நினைவு நாள்
இன்று குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலி நினைவு நாள் ஜூன் 3, 2016
முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்ததிலேயே ஊறியிருந்தது. அலியின் 12வது வயதில், அவரது சைக்கிளை ஒருவன் திருட முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தி சாய்த்தார். அவரது குத்துச்சண்டை வாழ்க்கை அப்போதே தொடங்கிவிட்டது.
தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்த முகமது அலி. வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார். 1981ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார். உடல்நலிவுற்ற போதிலும், கறுப்பர்களின் உரிமைகளுக்காக ஈடுபடுவது, சமூக சேவையில் இறங்குவது என தனது அந்திம காலத்தையும் தன் குத்துச்சண்டை நாட்களுக்கு இணையாக பரபரப்பாகவே கழித்து வந்தார் முகமது அலி. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு. சிறுநீரகக் கோளாறு , என பல நோய்கள் அலியை வதைத்தன. மரணத்துடன் நடந்த குத்துச்சண்டை போட்டியில் அவர் மரணத்தை பலமுறை நாக் அவுட் செய்தார். என்றாலும் இறுதியில் மரணமே வென்றது
Comments