அருணா ஆசஃப் அலி நினைவு நாள்

 இன்று விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி நினைவு நாள் ஜூன் 29, 1996




சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆள் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசஃப் அலியை சந்தித்துள்ளார். இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்ததால் அதுவே அவர்களை வாழ்க்கை பயணத்திலும் கரம் கோர்க்க செய்துள்ளது. அன்றைய கால கட்டத்தில் சமய எதிர்ப்பை உடைத்தெறிந்த திருமணங்களில் அருணா ஆசஃப் அலியின் திருமணமும் ஒன்று. 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார்.

விடுதலைக்குப் பின்னர் சோசியலிச இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியை மேற்கொண்டார். டெல்லியின் முதல் மேயராகவும் நியமிக்கப்பட்டார். மகளிர் உரிமைகளுக்காக  பாடுபட்டார் வார மற்றும் தினசரி பத்திரிகையை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. டெல்லியில் அவரது 87வது வயதில் மறைந்தார்.  அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி