எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள்
ஜூன் 29, (1947)
எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த நாள் இன்று.
பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.
தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றி பெற்றிருக்கின்றன.
சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார்.
2004இல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி தன்னிடம் முறைதவறி நடந்ததாகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது.
.
பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர்.
எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் தான் இருந்தார்
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்
மே 16, 2010 இல் சென்னையில் தனது 62ஆவது வயதில் காலமானார்
Comments