நான்காவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த வி வி கிரி நினைவு நாள்
இன்று ஜூன் 24 1980 இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த வி வி கிரி நினைவு நாள்
வி.வி.கிரி என்று அழைக்கப்படும் வரககிரி வேங்கட கிரி. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் பாதபட்டினம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறைக்குப் பொறுப்பு வகித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மாகாணத்தின் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக ராஜாஜி, டி.பிரகாசம் ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் அவர். 1957 தொடங்கி 1967 வரைக்கும் உத்தர பிரதேசம், கேரளா, மைசூரு மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1967-ல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார். கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1975-ஆம் ஆண்டு வி வி கிரிக்கு வழங்கப்பட்டது
Comments