ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி நினைவு நாள்
வரலாற்றில் இன்று - ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி நினைவு நாள் - ஜூன் 18, 1936 மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். வலிமையான இவரது எழுத்துகள் சாதாரண மக்களை விழிப்படையச் செய்தன. இலக்கியவாதிகளின் பாராட்டுகளைப் பெற்றன. ஏழைகள் இவரைத் தங்கள் பிரதிநிதியாகக் கொண்டாடினர்.உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார்.அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள். உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான். மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.
Comments