: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா மற்றும் பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டது
வரலாற்றில் இன்று - ஜூன் 1, 2001 : நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர் இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் பின்னர் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேப்பாள நாட்டின் அரசியலில் தடுமாற்றம், குழப்பம் சில நாட்கள் நீடித்தது.
இந்த கொலைகள் பற்றி பல செய்திகள் வந்தன. தனக்கு பிடிக்காத பெண்ணை தனக்கு மணம் செய்து வைக்க முயற்சித்ததால் கோபம் கொண்ட திபேந்திரா மன்னர்குடும்பத்தை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் மன்னர் ஆட்சியை நேபாளத்தில் ஏற்படுத்த வேண்டும் என திபேந்திரா வற்புறுத்தியதாகவும், அதற்கு மன்னர் ஒப்புக் கொள்ளாததால் அவர்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மன்னரும், ராணியும் ஜோதிடத்தைக் காரணம் காட்டி மறுத்ததால் திபேந்திரா சுட்டுக் கொன்றார் என்றும்கூறப்படுகிறது
Comments