மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றிய பி.சுந்தரய்யா
ஆந்திராவில் பிறந்து இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்தியாவில் பொதுவுடமைக் கட்சியை உருவாக்கியதிலும், கட்டியெழுப்பியதிலும், சுதந்திரத்திற்குப் பின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இந்தியக் குடியரசை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றிய பி.சுந்தரய்யாவின் நினைவு நாள் - (மே 19, 1985) . சுந்தரய்யா ,
1913ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார் .சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும். பிற்காலத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக நிஜாம் ஆட்சிக்கெதிராகிய தெலுங்கானா ஆயுத போராட்டங்களை நடத்தியவர்
சுந்த ரய்யா அவர்கள் மக்களுக்காகவும், சமூகத்திற் காகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழ்ந்தது மட்டுமல்ல; அரசியல் வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் அவர் விளங்கினார்.
அவர்ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியும் கூட. நாடாளுமன்ற மேலவைக்கு அவர் 1952ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955 வரை மூன் றாண்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவராக வும் பணியாற்றினார். 1955ல் ஆந்திர மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்குப் பிறகு, 1967 வரை 12 ஆண்டுகள், அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். 1978 முதல் 1983 வரை மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் பணியாற்றினார்.அந்தக் காலத்திலேயே தோழர் சுந்தரய்யா, நாடாளுமன்றத்தில் தனித்தன்மையோடு விளங்கினார். அவர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்தார் தோழர் பி. எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.
Comments