இன்று ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி.
இன்று ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி.
ஶ்ரீராமானுஜர் 18 தடவைகள் ஶ்ரீரங்கத்திலிருந்து நம்பிகளிடம் உபதேசம் பெற திருக்கோட்டியூருக்கு நடந்து சென்றார்.ஒவ்வொரு முறையும் நம்பிகளோடு வார்த்தைகளை மட்டிலும் உபதேசிக்கப் பெற்றார்.
1)மோட்சத்தில் விருப்பம் உடையவருக்கு சம்சாரமாகிய பிறவியின் வித்து அழிய வேண்டும்.
2)சம்சார வித்து அழிந்தால் அகப்பற்று,புறப்பற்றுகள் அழியும்.
3)நான்,எனது என்ற செருக்கு அழிந்தால் உடல் பற்று அழியும்.
4)உடலிலுள்ள விருப்பம் அழிந்தால் ஆத்ம அறிவு ஏற்படும்.
5)ஆத்ம ஞானம் ஏற்பட்டால் செல்வத்திலும் போகத்திலும் வெறுப்பு உண்டாகும்.
6)செல்வம்,போகம் இவற்றில் வெறுப்பு உண்டானால் எம்பெருமானிடம் அன்பு உண்டாகும்.
7)எம்பெருமானிடம் பரிபூரணமான அன்பு வளர்ந்தால் புலனின்ப நுகர்ச்சியில் உள்ளம் ஈடுபடாது.
8)புலனின்ப நுகர்ச்சியில் வெறுப்பு உண்டானால் பொருள் ஈட்டுவது,புலனின்ப நுகர்ச்சி,ஆசை,வெறுப்பு முதலியவை நீங்கும்.
10)ஆசையும் வெறுப்பும் நீங்கினால் ஶ்ரீவைஷ்ணவன் ஆகிறான்.
11)ஶ்ரீவைஷணவன் ஆனால் சாதுக்களின் நட்பு உண்டாகும்.
12)சாதுக்களின் தொடர்பினால் திருமாலடியார்களின் தொண்டன் என்ற நிலை உண்டாகும்.
13)திருமாலடியார்களின் தொண்டனை எம்பெருமான் தன்னுடைய தொண்டனாக ஆக்கிக் கொள்வான்.
14)திருமாலின் தொண்டனாக விளங்கினால் திருமாலுக்கு அடிமை செய்வதே பிறவிப் பயன் என்பதை உணரலாம்.
15)உலகியற் பயன்களை வெறுத்தால் எம்பெருமான் ஒருவனுக்கே அடியவன் ஆவான்.
16)எம்பெருமான் ஒருவனுக்கே அடியவன் ஆனால் எம்பெருமானையே புகலாக கொள்வான்.
17)எம்பெருமான் ஒருவனையே புகலாக
கொள்பவனே திருமந்திரத்தின் பொருளைக் கேட்கத் தகுதி பெறுகிறான்.
18)அவ்வாறு தகுதி பெற்றவனுக்கே திருமந்திரத்தின் பொருள் விளங்கும்.
ஶ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்றுவர 200 கி.மீ என்றால் 3600 கி.மீ,ஶ்ரீராமானுஜர் நடைப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும்.
19-ஆம் முறையாக திருக் கோட்டியூர் சென்று இறைவன் திருமுன்பு ஒரு மாதம் உபவாசம் இருந்து பின்னர் நம்பிகளிடமிருந்து திருமந்திரத்தின் செழும்பொருள் உபதேசத்தைப் பெற்றார்.இந்த உபதேசத்தைப் பெற்ற பின்னரே மக்களை அறைகூவி அழைத்து கோயில் கோபுரத்தின் மீதேறி அவர்களுக்கு திருமந்திரார்த்தத்தை உபதேசித்தார்.
ராமானுஜரின் கருணைப் பெருக்கை உணர்ந்த நம்பிகள் “நீரே எம்பெருமானார்” என்று கூறி அவரை வாரியணைத்து கண்ணீர் மல்கினார்.
20-ஆம் தடவை சென்ற ராமானுஜருக்கு,நம்பிகள் சரம சுலோகத்தின் செழும் பொருளை உபதேசித்தார்.
ஶ்ரீராமானுஜர் -
எம்பெருமானார்,
உடையவர்,
யதிராஜர்(துறவிகளினஅரசர்)என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
“உய்ய ஒரே வழி உடையவர் திருவடி”
Courtesy:முனைவர் இரா.அரங்கராசன்.
Comments