சிறுகதை ஆசான்

 கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு.ப.ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவர் எனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் ‘‘சிறுகதை ஆசான்’’ என்று அழைக்கப்படுகிறார்.


இவர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார். கண் பார்வை குன்றிய நிலையிலும் ‘மணிக்கொடி’ போன்ற இதழ்களில் அவரது இலக்கியப் படைப்புகளை எழுதி வெளியிட்டார்.மருத்துவ சிகிச்சைக்குப்பின் கண் பார்வை மீண்டும் கிட்டியது. சென்னைக்கு இடம்பெயர்ந்து முழுநேர எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. வ. ராமசாமி ஆசிரியராக இருந்த ‘‘பாரத தேவி’’ என்ற இதழிலும், கா.சீ.வெங்கடரமணி நடத்திய ‘‘பாரத மணி’’ இதழிலும் சிலகாலம் பணியாற்றினார். கு.ப.ரா தனது இயற்பெயரிலும் ‘‘பாரத்வாஜன்’’, ‘‘கரிச்சான்’’, ‘‘சதயம்’’ போன்ற புனைப் பெயர்களிலும் படைப்புகளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது கும்பகோணத்துக்கு மீண்டும் திரும்பி ‘‘மறுமலர்ச்சி நிலையம்’’ என்ற பெயரில் புத்தக நிலையம் ஒன்றை நடத்தினார். 1943 ஆம் ஆண்டு கிராம ஊழியன் இதழின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த ஆண்டு அவ்விதழின் ஆசிரியரானார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் காலமானார்.
பெரணமல்லூர் சேகரன்
நன்றி: தீக்கதிர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி