ஆச்சியின் நடிப்பு இன்றுவரை வெற்றிடம்.....
ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்படும் மனோரமா, அவர்களுடைய பிறந்த நாள் இன்று
என் நினைவலைகளில் "ஆச்சி மனோரமா"
கட்டுரையும் கவிதையும்
தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து 50 ஆண்டுக்கு மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்புற நடித்து தமிழ் ரசிகர்களை பெருமை பட வைத்தவர் ஆச்சி மனோரமா அவர்கள்
1958ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் அவர்களால் மாலையிட்ட மங்கை என்னும் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்
ஒருமுறை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் தனது பேட்டியில், நான் எவ்வளவோ நடிகர் நடிகைகளை புதுமுகமாக நடிக்க வைத்தாலும் ஆச்சி மனோரமாவை போல ஒருவரை அறிமுகம் செய்யமுடியவில்லை, அவர் என்றென்றும் நடிப்பில் சகலகலாவல்லி என சொல்லியிருக்கிறார்
அறிஞர் அண்ணா அவர்களோடு நாடகங்களிலும், கலைஞர் அவர்களின் வசனத்திலும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என். டி. ராமாராவ் போன்ற முதல்வர்களுடன் நடித்த பெருமை வேறு எவருக்கும் இல்லை
ஆம், ஆச்சி மனோரமாவை பற்றி சில வரிகள்
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக கலையுலகே தன்னுலகாய்
அசத்தலான நடிப்பில் என்றும் சகலகலாவல்லியாய்
நகைச்சுவை அம்சமும் தன்னுள் சேர்த்து
நாடக திரைப்படத்தில் நல்பாத்திரமும் ஏற்று
உள்ளத்தை தொட்டது ஒவ்வொரு படமும்
உணர்வுபூர்வ நடிப்பில் தெரிந்தது குணச்சித்திர
மும்
சொந்தக் குரலில் பாடியது நெஞ்சைத் தொடும்
எந்த வேடமும் உயர்வாய் மாறிடும்
மூன்று தலைமுறை கண்டது ஆச்சியின் காலம்
முகம் காட்டுமென்றும் சுறுசுறுப்பின் களம்
கின்னஸ் சாதனையில் பெற்றது தனியிடம்
கிடைத்த நடிப்பும் முழுமையை பெற்றிடும
ஆயிரத்திற்கு மேலே நடித்தவர் இவரே
ஆச்சியை அறியாத தமிழர்கள் எவரே
அம்மா பாட்டி என முத்திரை பதித்திடும்
ஆச்சியின் நடிப்பு இன்றுவரை வெற்றிடம்.....
Comments