வரலாற்றில் இன்று -
வரலாற்றில் இன்று - இந்தியாவின் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் மரணத்தை அடுத்து இடைக்கால பிரதம மந்திரியாக திரு குல்ஜாரிலால் நந்தா பதவி எற்றுக் கொண்டார் ( 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் நாள்) குடியரசு மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்வில் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் இவர் மிகச்சிறந்த தேசியவாதியும் சுதந்திரப்போராட்ட வீரருமான ஸ்ரீ குல்ஜாரிலால் நந்தா காந்தி, நேரு, படேல் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டராவார்.
சுதந்திர இந்தியாவின் தொழிலாளர் நல அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். லால் பஹதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின்பும் இரண்டாவது முறையாக இவரே தற்காலிக பிரதமராக பதவி வகித்துள்ளார்
Comments