கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறை
வரலாற்றில் இன்று மே 24, 1844- கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்தியினை அனுப்பினார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலிருந்து மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரிலிருந்த தனது உதவியாளர் ஆல்பிரட் வெய்லுக்கு உலகின் முதலாம் தந்தி செய்தியை அனுப்பினார். மோர்ஸ் அனுப்பிய அந்த முதலாம் தந்திச் செய்தி: "கடவுள் என்ன செய்தார்?" என்பதாகும்.
"What hath God wrought?" – (Bible, Numbers 23:23) மோர்ஸ் உருவாக்கி அதனை இவ்வாறு நடைமுறைப்படுத்திய இந்த தந்தி முறை தகவல் தொடர்பில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது
Comments