எம்.ஜி.ஆர் பற்றி சங்கிலி முருகன்
பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார்.
எம்.ஜி.ஆர் பல்லவ மன்னராக நடித்த காஞ்சி தலைவன் திரைப்படத்தில் ஒற்றன் வேடத்தில் சங்கிலி முருகன் நடித்துள்ளார். அப்போது ஒற்றன் வேடம் அணிந்து தனது வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டு இருந்துள்ளார். தான் பல்லவ மன்னன் வேடம் அணிந்து, எம்.ஜி.ஆர் மேக்கப் ரூமில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அவரை பார்த்த அனைவரும் வாயடைத்து போய் நின்றாராம். நிஜமாகவே பல்லவ மன்னன் இவ்வளவு அழகாக இருந்திருப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்தளவுக்கு அழகாக பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் இருந்ததாம். இதனை பார்த்ததும், சங்கிலி முருகன் தனது நண்பரிடம், ‘ வா சினிமாவில் இருந்து என்ன செய்ய போகிறோம்? வா ஊர்க்கு கிளம்பலாம்.’ என கூறினேன். என தனது அனுபவத்தை ஒரு விடீயோவில் சங்கிலி முருகன் தெரிவித்து இருந்தார்.
நன்றி: சினி ரிப்போர்ட்டர்
Comments