உலக புகையிலை இல்லா நாள்
உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும், மே மாதம் 31 ந் தேதியை, உலக புகையிலை இல்லா நாளாக' அறிவித்து உள்ளது. பீடி, சிகரெட் புகைப்பவர்கள், புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய் புற்று நோய், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம், மூச்சுக் குழாயின் உள் சுவர்களில் புண் உண்டாகி அதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். புகை பிடிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிக்கும் அருகிலிருப்போருக்கும் பாதிப்புகள் உண்டாகின்றன.
எனவே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோரும், அவற்றின் தீய குணங்களை உணர்ந்து இனியாவது புகைபிடிப்பதில் இருந்தும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கவே இன்று (மே 31) உலக புகையிலை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Comments