புல்லாங்குழல் இசைக்கலைஞர்,“மாலி”
மே 31,
புகழ்பெற்ற பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர்,“மாலி”என்றழைக்கபட்ட
T.R.மகாலிங்கம் நினைவு தினம் இன்று ( 1986 ).
தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். ஐந்து வயதிலேயே தனது மாமா ஜால்ரா கோபால அய்யர் நடத்திய இசைப் பள்ளியில் புல்லாங்குழல் கற்கும் மாணவர்கள் வாசிப்பதை கேட்டு, எவரும் கற்றுக்கொடுக்காமலேயே விர்போனி வர்ணத்தை சிறப்பாக வாசித்தான் சிறுவன் மகாலிங்கம் தன்னுடைய இருபதாம் வயதிலேயே மேடை கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசிக்க துவங்கி விட்டார்
புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.
மகாலிங்கம். கச்சேரிகளில் பத்தோடு பதினொன்றாக ஒரு துணைவாத்யமாக மட்டுமே வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த எளிய காற்று வாத்யத்தை அரியணையில் அமர்த்தி அழகுப் பார்த்த அரசனாக திகழ்ந்தார் மாலி. 31 மே 1986 (அகவை 59) அன்று மாலி மரணமுற்றார்
Comments