லூமன்ஸ் 2022” புகைப்படக் கண்காட்சி

 லூமன்ஸ் 2022” புகைப்படக் கண்காட்சி






சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் துறை மூன்று (11.05.2022 - 13.05.2022) நாட்கள் “லூமன்ஸ் 2022” என்ற புகைப்பட கண்காட்சியை நடத்தியது. இதில் முதல் நாள் (11.05.2022) அன்று  மாணவர்களின் ஓவியம், புகைப்படம், வரைபடம் இடம் பெற்றன.

இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர்கள்  திரு. எஸ். ஆர். பிரபாகரன், மற்றும் திரு. பி. விருமாண்டி. கவிஞர் க. மணிஎழிலன், பதிப்பாளர் - மலர்கண்ணன் பதிப்பகம் , இயக்குனர் - மேம் கிரியேஷன்ஸ், ஓவியர் முனியசாமி, ஓவியாலயா சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் செயலாளர் திரு. பிஜூ சாக்கோ, கல்லூரி முதல்வர் முனைவர் ந. தங்கவேல், துணை முதல்வர் முனைவர்  பா. ஜெயகுமார், IQAC ஒருங்கிணைப்பாளர் திரு. ஷபி மத்தாய், துறைத் தலைவர் திருமதி கோ. கவிதா, ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியல் பலவிதமான ஓவியங்கள் வரைபடங்கள், புகைப்படங்கள் இடம்பெற்றன. இவ்விழாவில் இயக்குனர் சத்யஜித்ரேவின்; (20அடி / 25அடி) உயரத்திலான புகைப்படம் சாக்பீஸ்சினால் வண்ணம் தீட்டப்பட்டு ஒளிரும் வகையில் அமைந்தது. 

இவ்விழாவில் (11.05.2022) முதல் நாள் நிகழ்வில் கலந்துக்கொண்ட கவிஞர் க.மணிஎழிலன் திரைத்துறையில் ஜெயிக்க புத்தகங்களையும், பத்திரிகைகளையும் தொடர்ந்து வாசிக்கவும், நிறைய படைப்புகளை எழுதி வெளியிடவும் வலியுறுத்தி மாணவர்களுக்கு பிரிண்ட் மீடியா முதல் விஷுவல் மீடியா வரை எனும் தலைப்பில் கருத்தரங்கையும் நடத்தினார். இயக்குனர் திரு. பி. விருமாண்டி கூறுகையில் புத்தகங்கள் வாசித்தலை மாணவர்களிடையே வலியுறுத்தினார். இயக்குனர் திரு. எஸ். ஆர். பிரபாகரன்   கூறுகையில் மாணவர்களுக்காக திரை உலகம் காத்துக்கொண்டிருகிறது என்று கூறினார். 

இவ்விழாவில் (12.05.2022) இரண்டாவது நாள் நிகழ்வில் விஜய் தொலைக்காட்சி இயக்குனர் துர்கா தாசன், யாத்திசை திரைப்பட நடிகர் சேயோன் மற்றும் பேனாசோனிக் இன்புலுயன்சர் திரு. பால மணிகண்டன், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ஊடக துறை மாணவர்கள் பங்கேற்றனர். 

இவ்விழாவின் (13.05.2022) மூன்றாம் நாள் நிகழ்வாக மாநில அளவிலான கல்லூரி மாணவர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 

இந்த லூமன்ஸ் என்னும் கண்காட்சி இக்கல்லூரியில் 11ஆம் ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் படைப்புகளை துறை சார்ந்தவர்களுக்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் எடுத்து செல்வதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காட்சி தொடர்பியல் துறை, பல மாணவர்களை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி