இயற்கையின் இளவரசி

 


காடு மேடுகளில்

சுற்றி திரியும்

பட்டாம்பூச்சி

இவள்.. இயற்கையின்

சுவாசம் இவள்..


ஆன்ராய்டு களில்

முழ்கி இருக்கும்

இன்றைய தலைமுறையில்

அதன் வாசம் கூட 

தெரியாமல் வண்ணத்து

பூச்சியாய் வலம்

வருபவள்..


கானகத்தின் மயில்

இவளின் உறவு

உயர்ந்த மரங்களிடையே

ஊஞ்சல் ஆடும் உயிர்

ஓவியம் இவள்..


தேவதைகளின் வம்சம்

அவள் .. ஆர்ப்பரிக்கும்

அருவி காற்றில் மிதக்கும்

சத்தங்கள் இவளுக்கு

இளையராஜாவின்

இசை ‌.‌..


 கொஞ்சும் தமிழில்

சந்தம் பாடும்

வஞ்சி அவள் ..

இயற்கையோடு

போராடும்

போராளி அவள் 


இயற்கை அன்னையின்

இலக்கியம் அவள்

இயற்கையை படிப்பதில்

பட்டம் பெற்றவள்.. இலக்கியம் தேவையில்லை

இயற்கையை படிப்பதற்கு..

இயற்கையின் இளவரசி

இவள்..


கலா



போட்டோ Pollachi Anbalagan

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி