இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழன்னையின் படத்தை வெளியிட்டார். அந்த படம், ழகரத்தை கொண்ட கோளுடன் தமிழன்னை வீரமாக நடனமாடும் வகையில் வரையப்பட்டுள்ளது. அதன் கீழ், தமிழணங்கு என்றும், 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரி இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அவரிடம் அமித்ஷா கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி' என கூலாக பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்
Comments