சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை!
சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவோடு செவ்வாழைப் பழத்தைக் கொடுத்தால், நாள் முழுக்க உற்சாகத்துடன் இருப்பார்கள்.
காலை உணவு சாப்பிட நேரமில்லாத வர்கள் செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் சோம்பல், மந்தம் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த செவ்வாழைப் பழத்தை மலச்சிக்கல், அஜீரணம், வாய்வுத் தொல்லை போன்ற குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டால் அவற்றின் தீவிரம் குறையும்.
செவ்வாழைப் பழம் வைட்டமின் பி-6 நிறைந்தது. ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த செவ்வாழைப் பழம் சாப்பிடலாம்.
செவ்வாழையிலுள்ள பொட்டாசியம், சீறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Comments