தலைமுறைகளை வாழச் செய்த தாய் வங்காரி மத்தாய்.
வங்காரி மத்தாய் (1940 - 2011 ) ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த சூழலியலாளர். சூழலியல் பாதுகாப்பில் ஈடுபட்டு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
ஆப்பிரிக்காவின் பசுமையைக் காப்பாற்றுவதில் பெண்களை திரட்டும் இயக்கத்தில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான மரக்கன்றுகளைத் தன் வாழ்நாளில் நட்டு மாபெரும் பசுமையை விதைத்தவர். வளர்த்தவர்.
பின் அரசியலில் ஈடுபட்டுச் சூழலியல் அமைச்சராகவும் ஆனவர்.
அவருடைய பிறந்த நாள் இன்று.
அவருடைய மேற்கோள் ஒன்றினை என்னுடைய 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' என்ற சூழலியல் ஹைக்கூ நூலில் பயன்படுத்திக்கொண்டேன்.
"மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, சுத்தமான காற்று போன்றவை கிடைக்கின்றன. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்"
தாய்மை என்பது எல்லையற்றது.
உலகின் வளங்களை பாதுகாப்பதன் மூலம் தலைமுறைகளை வாழச் செய்த தாய் வங்காரி மத்தாய். தாய் என்ற சொல்லைத் தன் பெயரிலேயே கொண்ட மத்தாய் உலகிற்கும் தாயாகிறார்.
அவருடைய பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன் . அவர் நட்ட மரங்கள் சுவாசிக்கும் வரை அவர் வாழ்வார்.
வணக்கம் வங்காரி மத்தாய்.
*
பிருந்தா சாரதி
*
Comments