உடல் வெப்பத்தை தணிக்கும் புதினா துவையல் - சுவையாக செய்வது எப்படி?

 

உடல் வெப்பத்தை தணிக்கும் புதினா துவையல் - சுவையாக செய்வது எப்படி?






பழங்காலம் தொட்டே பல்வேறு வகையான அற்புத மூலிகைகளைப் உணவுக்காகவும், மருந்தாகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை மற்றும் உணவுப் பொருளாக புதினா கீரை இருந்து வந்திருக்கிறது.

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.

புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது. சுவையான புதினா துவையல் காரசாரமாக 5 நிமிடத்தில் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

புதினா – ஒரு கட்டு

உளுந்தம் பருப்பு – 3 தேக்கரண்டி

வர மிளகாய் – 6 பூண்டு

பல் – 4

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

இஞ்சி – 1 சிறு துண்டு (1/2 இன்ச்)

புளி – அரை எலுமிச்சம் அளவிற்கு

உப்பு – தேவையான அளவிற்கு

செய்முறை:

புதினாக் கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் மூன்று தேக்கரண்டி அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். உளுத்தம் பருப்பு வறுபட்டதும் அதனுடன் வர மிளகாய்கள் போட்டு வறுக்க வேண்டும்.

பின்னர் தோலுரித்த பூண்டு பற்கள், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கி பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

நன்கு ஆறிய பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் ஆய்ந்து வைத்த புதினா இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

ஐந்து நிமிடத்தில் இலைகள் சுருங்க வதங்க வேண்டும். பின்னர் அதனையும் மிக்சி ஜாரில் போட்டு கொள்ளவும்.

இப்போது நைசாக அரைக்காமல் கொரகொரவென்று இரண்டு, மூன்று சுற்று சுற்றி இறக்கவும்.

பின்னர் தாளிக்க கடுகு மற்றும் உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டவும்.

சுவையான புதினா துவையல் ரெடி... 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி