இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா
சென்னை-25,திருவள்ளூர் மாவட்டம், ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆவடி புதுநகரில் உள்ள இனிய உதயம் மாலை நேர திறன்வளர் மையத்தில் ஆண்டு விழா மாலை 5 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 7 மணிவரை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு முனுசாமி, திரு லோகநாதன், திரு சண்முகம், திரு அஜித், ஷிபா, திரு கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் இக்குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் நாங்களும் பக்கபலமாக இருக்கிறோம் என்று கூறினார்கள். குழந்தைகளுக்கு நல்லுரைகள் வழங்கி பரிசு பொருட்டகள் வழங்கினர்.
தம்குழந்தைகளின் ஆடல்,பாடல்,மற்றும் நாடகம் கலை உணர்வுகளை காண ஏராளமான பெற்றோர்கள் இந்த ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டனர். குழந்தைகளுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது அதிலும் மையத்தின் குழந்தைகளே கதை வசனம் எழுதி நாடகத்தையும் நடித்துக் காட்டினர். அனைத்திலும் வெற்றி பெற்று சிறப்பு விருந்தினர்கள் மூலம் பரிசு பொருட்களை பெற்றுகொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானம் மற்றும் மிச்சர் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு விழா நிகழ்வில் தன்னார்வலர்கள் கோவிந்தராஜ், கீர்த்தனா, பிரியதர்ஷினி, ஷோபனா, மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு விழா நடப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.
விழாவின் இறுதியில் ஆசிரியை மேகலா அவர்கள் இந்த விழாவிற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி கூறி, தேசிய கீதத்துடன் இந்த விழா இனிதே முடிந்தது
Comments