நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி
பழம் பெரும் நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி காலமானார்!
குணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி.
இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம். மேலும் குட்டிமா என்ற குறும் படத்திலும் இவர் நடித்துள்ளார். அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். அதை அடுத்து இவரை குட்டிமா பாட்டி என்றழைக்கத் தொடங்கிட்டாய்ங்க
படங்களில் நடித்த போது எம் ஜி ஆர் சிவாஜி ஆகியோருக்கு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார்.தன்னுடைய சமையல் பிடித்ததால் எம் ஜி ஆர் தன்னை அடிக்கடி வீட்டிற்கு ஜி சமையல் செய்து தரசொல்வாரம் அப்போதே அதற்காக 10000 ரூபாயை அளித்தாராம் எம் ஜி ஆர்
இவர் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரங்கம்மா பாட்டி உடல் நல குறைவு காரணமாக தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இதுவரை பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் தன் குடும்பத்திற்கே செலவழித்துள்ளார். மேலும் அவர் தன்னிடம் யார் கஷ்டம் என்று கேட்டாலும் உடனே உதவி செய்வார்
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் எம் ஜி ஆர் சமாதிக்கு சென்று பொம்மை மற்றும் இதர பொருட்களை விற்று வருவார் அதில் அவருக்கு 300 முதல் 400 அதில் வரை கிடைக்கும் என்று சொன்னவரிடம். உங்களுக்கு என்ன தான் ஆசை என்று கேட்டதற்கு எம் ஜி ஆர் ஒரு பாடலில் சொன்னது போல நான் உழைத்து தான் உண்ணுவேன் யாரிடமும் நான் கை எந்தியது இல்லை நான் சாகும்வரை நடிக்க வேண்டும் அது தான் என் ஆசை என்று சிரித்தபடியே சொன்ன ரங்கம்மா@ குட்டிமா பாட்டி இப்போது இல்லை.
Comments