எந்த நேரத்தில்? என்ன உணவு உன்ன வேண்டும் !!
எந்த நேரத்தில்? என்ன உணவு உன்ன வேண்டும் !!
நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை.
நிறையவே மாறிவிட்டது. பெண்களில் நிறைய பேர் வேலைக்குச் செல்கின்றனர். இரவு ஷிப்ட் முதல் பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை. சங்யான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும் போது, உடல்நிலை பாதிக்கப் படுகிறது.
அதையும் கவனிக்க நேரமில்லை. இது நல்லதா? எந்தெந்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும்?
உணவை உண்பதற்கு மணிக் கணக்கைப் பின்பற்றுவது தவறு.
உணவு அருந்துவதற்குச் சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் நமக்குச் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் முக்கியமான அறிகுறி பசி. வயிற்றில் பசி தோன்றும் நேரத்தில் அதற்குத் தீவனம் போட வேண்டியது அவசியம். பசி எடுக்காமல் உணவு அருந்துவது உடலுக்கு மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
உண்ட உணவு வயிற்றில் ஜீரணமாகி விட்டதா என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே உண்ட உணவு செரிக்கும் முன் வேறு உணவை உட்கொள்ளலாகாது.
வயிற்றில் உணவு ஜீரணமாகாத நிலையில் இருக்கும்போது மீண்டும் உணவு உட் காண்டால் முன் உண்ட உணவின் ஜீரணமாகாத அன்ன ரசம், பின்பு உண்ட உணவின் ரசத்துடன் கலந்து விரைவில் எல்லா தோஷங்களையும் சீற்றமடையச் செய்து விடும்.
உணவு ஜீரணமடையாத நிலையில் உருவாகும் ஏப்பம் உணவின் சுவை, மணம் இவற்றுடன் வெளிவரும். ஏப்பம், சுவை இல்லாமல் சுத்தமாக வந்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும்.
"உட்கொள்ளும் வேளையில் இருதயம், #உடல் #துவாரங்கள், #முகம், #கண்கள் இவை தெளிவுற்றிருக்க வேண்டும். வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தமது இருப்பிடங்களிலிருந்து சரியாக இயங்க வேண்டும். "
உடல் கழிவு வெளியேறிய பிறகு, வயிற்றில் பசியும், தாகமும் தோன்றி ஜீரண சக்தி நன்கு வளர்ந்திருக்க வேண்டும். உடல் லேசாக இருக்க வேண்டும். இப்படி இருக்கையில் உணவு உட்கொண்டால், பாதிப்பு ஏதும் ஏற்படாமல், ஆயுள், பலம், நிறம் இவற்றை வளர்க்கிறது. இது தான் உண்பதற்கு உகந்த காலம்.
எண்ணெய் பசை உள்ளதும், எளிதில் ஜீரணமாகக் கூடியதும், சூடாகவும் உள்ள உணவு வகைகளை எப்போதும் உட்கொள்ள வேண்டும்.
“இந்த உணவு எனக்குப் பொருந்தும், இது எனக்குப் பொருந்தாது”
என்று நம்மை நன்கு கவனித்துக் கொண்டு உணவை உண்ண வேண்டும்.
மிகவும் கால தாமதமாகவோ, அளவுக்கு மீறியோ, குறைந்த அளவிலோ உணவை உட்கொள்வது கூடாது. ஜீரணத்துக்கு ஏற்ற வகையில் முதலில் கடின உணவையும், இனிப்புகளும், எண்ணெய்ப் பசையுமுள்ள உணவை உண்ண வேண்டும்.
புளிப்பு, உப்புச் சுவை கொண்ட உணவுகளை இடையிலும் (சாம்பார், ரசம்), காய்ந்த, திரவமான, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை இறுதியிலும் (மோர்) உட்கொள்ள வேண்டும்.
ஜீரண சக்தி குறைந்தவர்கள் முதலில் சூடான திரவப் பொருட்களை அருந்துவது மிகவும் பயனளிக்கும்.
மிகத் தாமதமாகவும், மிக விரைவாகவும், பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், மனதை வேறிடத்தில் செலுத்தியபடியும் உணவு உண்டால், வயிற்றில் ஜீரணம் சரியாக நடைபெறாது.
எண்ணெய்ப் பசையுள்ள உணவு புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத் தன்மையைப் போக்குகிறது. உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் ஜீரணமடைகிறது.
சூடான உணவு சுவையூட்டுகிறது. கபத்தை வளர்ப்பதில்லை. இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமலேயே மறுநாள் காலையில் உணவு உண்டால், கெட்டுப் போன பாலுடன் கலந்த நல்ல பாலும் கெடுவது போன்று பாதிப்பு ஏற்படும்.
வயிற்றில் இரண்டு பங்கு உணவும், ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு காலியாகவும் இருக்கும் வகையில் உணவு உண்ண வேண்டும்.
சாப்பாடு மட்டும் சரியாகச் செரித்து விட்டால்
சாகும் மட்டும் கொண்டாட்டம் தான்...
இன்னும் கொஞ்சம் கூட விளக்கமாக
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும்.
உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
Comments