மனஅழுத்தம் நீக்கும் இயற்கை உணவுகள்
மனஅழுத்தம் நீக்கும் இயற்கை உணவுகள்
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகள், பிடிக்காத விஷயங்கள்,வேலைப்பளு, நமக்கு பிடித்த விசயங்களை செய்யமுடியாமல் இருப்பது,தனிமை,நமக்கு நெருங்கியவர்களின் பிரிவு, அடுத்தவர்கள் நம்மை குறை கூறுவது இப்படி பல காரணங்களினால் நமக்கு மனஅழுத்தம் உண்டாக்குகிறது. இந்த மனஅழுத்தத்தை நாம் உண்ணும் உணவு கள் மூலமாக எதிர்கொள்ளலாம்.மஞ்சளில் இருக்கக்கூடிய "curcumin "என்ற வேதிப் பொருள் மனதை சாந்தப்படுத்தும்.நல்ல தூக்கத்தை வரவழைக்கும். மூளையை நன்றாக இயங்க வைக்கும்.வல்லாரைக்கீரையில் உள்ள " vellarin "என்ற வேதிப் பொருள் மனஅ மைதியை கொடுக்கும். நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்.
வாழைப்பழம் தினமும் 2 சாப்பிடுவதன் மூலம் மனக்கவலை நீங்கும்.இரத்த அழுத்தம் சீராகும்.இருதயம் சீராக இயங்கும்.மாதுளம் பழம்,பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, தூதுவளை கீரை,சீரகம்,காளான்,ஆலிவ் எண்ணெய்,டார்க் சாக்லெட்,ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகளான மீன் போன்ற உணவு வகைகள் செரடோனின்( serotonine) என்ற மனமகிழ்ச்சி கொடுக்கக்கூடிய ஹார்மோனை சுரக்கவைத்து மனஅழுத்தத்தை போக்கி மன மகிழ்ச்சி அடையச்செய்கிறது.நாம் மேற்கண்ட. உணவுவகைளை அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி சந்தோசமாக வாழலாம்.
வாழ்க வளமுடன்
Dr. Revathi Perumalsamy
Comments