பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

 : பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த சூப்பரான தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.



தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.


இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
கல்கியின் பொன்னியின் செல்வன் அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினத்தை படிக்கும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்தோன்றி மறையும். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏரிப்பிராயணம் செய்து கொண்டிருந்தான்... என அந்த காட்சியையும் அந்த வீர நாராயண ஏரியின் காட்சியை முன் தோன்ற வைத்து உள்ளத்தை வசீகரிக்கும் இதுதான் இந்த புதினத்தின் சிறப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு மணிரத்னம் திரைப்படமாக்கி உள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இப்படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியர் நடைபெற்றது. குவாலியர் கோட்டை 9 நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள சாஹூ பகுகா கோவிலியில் அரிய வகையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. மேலும், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இசை கோர்ப்பு & பாடல் பதிவு நடக்கும் புகைப்படத்தை ஏ.ஆர். ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். செறிவுமிக்க பாடல் குரல் பதிவு நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி