பான் இந்தியா படங்களுக்காக குறிவைக்கப்படும் 3 தமிழ் நடிகர்கள்

 பான் இந்தியா படங்களுக்காக குறிவைக்கப்படும் 3 தமிழ் நடிகர்கள்.. கதிகலங்கச் செய்த கட்டப்பா


பான் இந்திய படங்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது எல்லா மொழிகளிலும் படங்களை ரிலீஸ் செய்து அதன் மூலம் நல்ல லாபம் பார்க்க நினைக்கின்றனர். அதுவும் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்திய படங்களாக வெளியாகிறது.



ஒரு படம் பான் இந்திய படமாக வெளியானால் எல்லா மாநில ரசிகர்களையும் கவருவதற்காக அந்தந்த மொழிகளில் நடித்து மிகவும் பரிச்சியமான நபர்களை தங்கள் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள்.

இதன் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவரலாம் என்ற நோக்கில் இந்த அஸ்திரத்தை கையாளுகிறார்கள். அப்படி பான் இந்தியா படங்களுக்கு என்றே தமிழ் தேர்ந்தெடுக்கப்படும் 3 நடிகர்களை பார்க்கலாம். சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நல்ல பரிச்சயமானவர். இதனால் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனியை படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இப்படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரத்திற்கு எதிர்பார்த்த அளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்நிலையில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி வசூலில் வேட்டையாடிய படம் பாகுபலி.

இப்படத்தில் அனைத்து மொழிகளிலும் பரிட்சயமான சத்யராஜ், நாசர் இருவரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், பிங்கள தேவனாக நடித்திருந்த நாசரின் அற்புதமான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.

இப்படி எல்லா மொழிகளிலும் பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து ஏதாவது ஒரு கேரக்டர் கொடுத்து பான் இந்தியத் திரைப்படங்களில் நடிக்க வைத்துவிடுகிறார்கள். இதன் மூலம் ரசிகர்களை கவர் பண்ணி விடலாம் என்ற சூழ்ச்சிதான் பின்னால் உள்ளது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி