குற்றவியல் நடைமுறை சட்ட (#CrPC) பிரிவு 125(3) படி, #ஜீவனாம்சம் (#Maintenance) பாக்கி
குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 125 படி பாக்கி இருந்து, அதை கட்டாத கணவரை 1 மாதத்துக்கு மேல் சிறை தண்டனை வழங்குவது சட்ட விரோதம்- பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு.
===================================
குற்றவியல் நடைமுறை சட்ட (#CrPC) பிரிவு 125(3) படி, #ஜீவனாம்சம் (#Maintenance) பாக்கிக்காக கணவரை விசாரணை நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த சட்ட பிரிவுப்படி, ஒரு மாத சிறை தண்டனை மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட முடியும். அதன் பிறகு, மனைவி தனி மனு போட்டு, அதன் பேரில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
நீதிமன்றம், கணவரை சிறையில் அடைக்க உத்தரவிடும் முன், 2 சூழலை ஆராய வேண்டும்.
1. கணவர், வேண்டுமென்றே எந்த வித நியாயமான காரணம் இல்லாமல், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை.
2. ஜீவனாம்ச பாக்கிக்கு வாரன்ட் கொடுத்து வாய்ப்பளிப்பது.
அதன் பிறகும், கணவர் பாக்கி வைத்திருந்தால், ஒரு மாத சிறை தண்டனை கொடுக்கலாம்.
அதாவது வாரன்ட் அனுப்பி, கணவர் வசம் கேட்டு, பாக்கி ஏதும் இல்லாவிட்டால், தண்டனை கொடுக்க தேவை இல்லை. பாக்கி இருந்தால், ஒரு மாத சிறை தண்டனை வழங்கலாம்.
Comments