ரொம்பவே கண்கலங்கி போனேன்.
1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கதையை அப்படியே இம்மியளவு கூட மாறாமல் படம் பிடித்து காட்டியுள்ளது ‘83’ திரைப்படம். இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இயக்குனர் கபீர் கான் இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது ஓ.டி.டி-யில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இப்போது பேசியுள்ளார் 1983-இல் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்.
“83 படத்தை முதல் முறை பார்க்கும் போது பெரிய தாக்கம் ஏதும் எனக்கு இல்லை. ஆனால் இரண்டாவது முறையாக பார்த்து ரொம்பவே கண்கலங்கி போனேன். மூன்றாவது முறையாக படத்தை நான் பார்க்கப் போவதில்லை.
எங்களது வாழ்க்கை அப்படியே இருந்தபடி எதுவுமே மாறாமல் மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது” என கபில்தேவ் தெரிவித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதிய தலைமுறை
Comments
(அதிலும் ரன்வீரின் கபில் போலிங் ஆக்ஷன்)
அவ்வப்போது ஒரிஜினல் க்ளிப்பிஙுகும் கலந்து காட்டும்போதுதான் இந்த ஒற்றுமை நன்றாக தெரிகிறது..
Finalலில் ஸ்ரீகாந்த் அடித்த அந்த cover drive, shot of the tournament என்று அப்போது சொல்லப்பட்டது. அதை விவ் ரிச்சர்ட் கைதட்டி பாராட்டுவது போல் காட்டியிருக்கிறார்கள்.
இயல்பான நகைச்சுவை, மிகைப்படுத்தாத நடிப்பு, ஒரு இமாலய சாதனை நிகழ்வை கன்னெதிரே கொண்டுவந்திருக்கிறார்கள்.
திரைக்கதையில் எந்தெந்த சம்பவங்கள் உண்மை அல்லது சுவைக்காக சேர்க்கப்பட்டது என்று தெரியாது.. ஆனால் , அந்த வேர்ல்டு கப் லைவ் டெலிகாஸ்ட்டை டிவியில் பார்த்த போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி இந்த படத்தைப் பார்த்த போதும் ஏற்பட்டது...
எம்.மோகன், அண்ணாநகர், சென்னை.

எம். மோகன், அண்ணா நகர், சென்னை.