முட்டை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க,

 முட்டை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க,




பத்து நிமிஷத்தில் முட்டையை அவித்து எடுத்து வெங்காயம், தக்காளி போட்டு இப்படி ஒரு தொக்கு செய்து பாருங்கள், வேறு குழம்பு உங்களுக்கு தேவையே கிடையாது! என்னடா சமையல் செய்வது? என்று யோசிக்கும் வேளையில் உடனே செய்து ருசிக்க ருசிக்க சூடான சாதத்துடன் சாப்பிட கூடிய இந்த சுவை மிகுந்த முட்டை தொக்கு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.


 முட்டை தொக்கு செய்ய 

தேவையான பொருட்கள்: முட்டை – 6, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.


முட்டை தொக்கு செய்முறை விளக்கம்: முதலில் தேவையான முட்டையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து எடுத்தால் முட்டை நன்கு அவிந்து வந்திருக்கும். முட்டை அவிக்கும் பொழுது உடையாமல் இருக்க கொஞ்சம் கல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். அவித்த முட்டையை நன்கு ஆறிய பின்பு தோல் நீக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்


. இப்போது தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் ஒரு இணுக்கு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தோல் நீக்கி சுத்தம் செய்து பொடிப்பொடியாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர வதங்கி வரும் பொழுது இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இவற்றின் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளி துண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போகும் பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து விடுங்கள்.

 இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது, நன்கு தளதளவென எண்ணெய் பிரிய திரண்டு வரும் பொழுது, நீங்கள் அவித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து இரண்டு முறை நன்கு பிரட்டி விட வேண்டும். முட்டைக்குள் மசாலா இறங்க வேண்டும் என்பதால் கரண்டியை வைத்து லேசாக ஓரிரு இடங்களில் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு 2 நிமிடம் நன்கு பிரட்டினால் முட்டைக்குள் மசாலா அனைத்தும் இறங்கி நல்ல சுவையுடன் இருக்கும். 

அதன் பிறகு நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த முட்டை தொக்கு நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி