அருந்ததி ராய்
இந்திய எழுத்தாளர்களில் ஆங்கில நாவல் எழுது கிறவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதில் வியாபார ரீதியாய் வெற்றி பெற்று பொருளும், புகழும் குவித்தவர்கள் வெகு சிலர்தாம். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ‘The God of Small Things’ படைப்பின் மூலம் உலகப்புகழ் பெற்ற அருந்ததி ராய் ஆவார்.
மிக உயர்ந்த கவுரவமான புக்கர் பரிசை அந்நூலின் மூலம் அவர் பெற்றார். டெல்லியில் நடிகையாயிருந்து பின்பு ஏரோபிக் பயிற்சியளிப்பவராகி எழுத்தாளராய் மாறிய அருந்ததி தமது பதிப்பாளர்களிடம் சுமார் 150 கோடி ரூபாய்களைப் பெற்றிருக்கிறார். அதுவும் முன் பணமாக. 20 நாடுகளில் வெளியான ‘The God of Small Things’ மூலம் கிடைத்த மதிப்பு சர்வதேச ஊடகங்களின் கவனத்தைத் தன்பக்கம் ஒரே நாளில் ஈர்த்து விட்டார் அவர்.
அருந்ததி ராய் வங்காளத்தில் 1961-ல் பிறந்து, கேரளத்துக் கடலோரம் அய்மனம் என்ற ஊரில் வளர்ந்தார். அவருடைய தாயார் மேரிராய் ஒரு வங்காள இந்துவை மணந்து, விவாகரத்து பெற்றவர். அருந்ததி தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களையே நாவலில் விவரித்திருக்கிறார்.
தமது தாயைப் போல் ஒரு பாத்திரத்தை நாவலில் இடம்பெறச் செய்தார் அவர். நாவலில் வருவதுபோலவே நிஜ வாழ்விலும் அந்தத் தாய் ஒரு தேயிலைத் தோட்டத்தை நிர்வகிக்கிறார்.
அருந்ததி பத்து வயது வரை படிக்கவில்லை. அவருடைய தாயார் தொடங்கிய பள்ளிக் கூடத்தில் அவர் முதல் மாணவி யாய் சேர்கிறார். பிறகு லவ்டேல் ஸ்கூலில் சேர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கிறார். அப்போது அவருக்கு வயது பதினாறு.
ஒரு டீனேஜ் பெண் தன் வீட்டைவிட்டு வெளியேறு வது இயல்பான காரியமல்ல. ஆனால் அருந்ததிராய் அந்தக் காரியத்தைச் செய்தார். ஆம் படிப்பைவிட்டு, வீட்டைவிட்டு டெல்லிக்குச் சென்றார்.
அங்கே உரிமை யில்லாத நிலத்தில் குடியிருக்கும் கூட்டத்தில் அவரும் ஒருவராகிறார். தகரக் கூரையிட்ட சிறிய குடிசை. காலி பீர் பாட்டில்களை விற்றுப் பிழைப்பு.
அருந்ததி தம்மைப் பற்றிச் சொல்வார் ‘ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்குரிய எந்தக் கட்டுப்பாடும் எனக்கு இருந்ததில்லை என்பதற்காய்க் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
Comments