ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்.
இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
18.03.2022
கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள்.
இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர்.
ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடு கின்றனர்.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு போல, ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தான். வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகையை அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Comments