`வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்!
`வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்!
பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் முன்னரே பெயர் வெளியிடப்படாத நிலையில், அவர் சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக விழா மேடைக்கு வருகை தந்தார். விளக்கு ஏற்றும் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.
கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் நீங்கள் பாவனா" எனப் பேசினார்.
இதில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாவனா நிகழ்வில் கலந்து கொண்ட காணொலியைப் பகிர்ந்து நடிகை பார்வதி மேனன், "வெல்கம் பேக் பாவனா. இது உங்களுக்குக்கான இடம். உங்கள் கதை. உங்களுடையது!" எனப் பதிவிட்டுள்ளார்.
பாவனா ‘Ntikkakkakkoru Premondarnn’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மலையாளத்தில் அவர் கடைசியாக நடித்தது 2017ல் வெளிவந்த 'Adam Joan' என்கிற படம். அதன் பிறகு கன்னட படங்களில் நடித்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளத் திரையுலகத்திற்கு வரும் பாவனாவை ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற வண்ணம் உள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்களும் படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
Comments