தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர்


 ஆத்தூர் :தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர், தன் கணவருடன் உடல் தானம் செய்துள்ளார்.சேலம் மாவட்டம்,ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புஷ்பாவதி, 47; இவர், தன் கணவர் கதிர்வேலுடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக ஆத்தூர், விநாயகபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சாலையோரம் தள்ளுவண்டியில் இரவு நேர ஹோட்டல் நடத்தி வருகிறார்.தற்போது, நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றபோதும், வழக்கம்போல், தினமும்தள்ளுவண்டியில்ஹோட்டல் நடத்தும் தொழிலை செய்துவருகிறார்.

தன் வார்டில் உள்ளமக்களிடம், அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து, நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்து, சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.கவுன்சிலர் புஷ்பாவதி கூறியதாவது:நான், 17 ஆண்டுகளாக
தி.மு.க., உறுப்பினர். எங்கள் வார்டு மக்களின் விருப்பத்தால் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.சாலையோரம் தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தி, என் இரண்டு மகளையும் திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.கவுன்சிலராக வெற்றி பெற்றதால், எங்களை காப்பாற்றிய தொழிலை விட்டு விட முடியாது. பலருக்கு உணவளிக்கும் தொழில் என்பதால், மனம் தளராமல் செய்து வருகிறோம்.எங்களது இறப்புக்கு பின், உடல் கூட மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன்,ஆறு மாதங்களுக்குமுன், சேலம் அரசுமருத்துவமனையில், நானும், கணவரும்உடல் தானம் செய்வதாக எழுதி கொடுத்துஉள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி