சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்
பன்னூர் அல்லது பரந்தூர்: சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்
சென்னையில் அமையவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக மாநில அரசு பரிந்துரைத்த இடங்களில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, முதலில், சென்னையை சேர்ந்த குழு பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை ஆய்வு செய்து, முன் சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், தற்போதுள்ள விமான நிலையத்தை திருசூலத்தில் தொடர அனுமதிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதால், கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு பயணிக்க பயணிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும்.
நான்கு தளங்களின் பல்வேறு அம்சங்களை கவனமாக ஆலோசித்த பிறகு, இந்த இரண்டு இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பட்டியலிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னூர்
பன்னூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருந்தாலும், அங்கு ரோமன் கத்தோலிக் மக்களும், தெலுங்கு மொழி பேசுபவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். திருவள்ளூரையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் பன்னூர் அமைந்துள்ளது.
பரந்தூர்
பரந்தூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2465 ஆகும். இவர்களில் பெண்கள் 1274 பேரும் ஆண்கள் 1191 பேரும் உள்ளனர்.
மற்ற பரிந்துரை தளங்களான, படலம் மற்றும் திருப்போரூரில் சில கட்டுப்பாடுகளும், வரம்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் நிலத்தின் விலை மற்றும் இருப்பு குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம்
சென்னையில் அமையவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனவே, TIDCO ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அடுத்த நடவடிக்கை குறித்து மாநில அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளது.
மற்றொரு வட்டாரம் அளித்த தகவலின்படி, இந்திய விமான நிலைய ஆணையம் கூடுதல் ஆய்வுகளுக்கு இரண்டு தளங்களை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. ஒரு தளத்தை இறுதி செய்வதற்கு முன், தொழில்நுட்ப சாத்தியம் ஆய்வு, தடைகள் வரம்பு மேற்பரப்பு மற்றும் வேறு சில சோதனைகள் செய்ய வேண்டும்.
பின்னர், மையத்திலிருந்து ஒரு வழிகாட்டுதல் குழு தளத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதையடுத்து, கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அந்த இடத்திற்கு பல அனுமதிகளைப் பெற வேண்டும். புதிய விமான நிலைய பணிகள் அதிவேகத்தில் நடைபெற்றாலும், விமான நிலையம் நிஜமாக குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.
Comments