அவள் ../கவிதை/மகளிர் தினம்2022,

 அவள் 

----------


அன்னை மடி

தவழ்ந்திடும்

குழந்தையாய்

அவள் ! 


தந்தைக்கு 

என்றுமே 

தேவதையாய்

அவள் !


உடன்

பிறந்தவர்களுக்கு

பெறாத

அன்னையாய் 

அவள் !


நட்பு

தடுமாறும்

போது

அணைத்துக் 

காத்திடும்

உற்ற 

தோழியும்

அவளே !


புகுந்த 

வீட்டிற்கு

செல்லும் 

பொன் மகள் !


மாமியாருக்கு

மகளாய் 

நாத்தனார்க்கு

சகோதரியாய்

திகழ்பவள் !


கணவனுக்கு

சிறந்த 

மனைவியாய் !


தன்னவன் சோர்ந்து

போகும் வேளையில்

அவனுக்கு 

அறிவுரை சொல்லும் 

தந்தையாய், தன் மடி

சாய்த்து ஆறுதல் 

சொல்லும் தாயாய்,

எது வந்த போதும்

எப்போதும் கை

கொடுப்பேன்

என்றுரைக்கும்

சகோதரனாய்,

தோள் சாய்த்து

கொள்ளும்

தோழியாய்,

மாறிடுவாள் 

அவள் !


பத்து மாதம்

கருவில் 

சுமக்கும் 

தன் பிள்ளையின்

அருகே

மீண்டும் 

தாயாகிறாள்

அவள் !


உயிர் 

கொடுத்து 

உயிரானவள்

பெண் !

---நித்யஸ்ரீ



💞💞💞

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி