அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பாக பள்ளி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று காலை 10 மணிமுதல் நடைபெற்றது. குரோம்பேட்டை நாகல்கேணி அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி ஆரம்பப் பள்ளியில் மேல்நிலை பள்ளியிலும் SMC எனப்படும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்வானது பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு செய்வதற்கான ஒரு விழிப்புணர்வு கூட்டமாக அமைந்திருந்தது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டதிற்கு 50க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். அரசினர் ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோர்களுக்கு இனிய உதயம் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளர் அல்லா பகேஷ் அவர்கள் விளக்கவுரை அளித்தார் இதில் மாமன்ற உறுப்பினர் முன்னாள் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் குழுவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments