திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் .100 நாட்கள் தையல் பயிற்சி மேற்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா
சென்னை- திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் .100 நாட்கள் தையல் பயிற்சி மேற்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாலை 4 மணி முதல் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது இந்த விழாவை திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஹூண்டாய் கிளோவிஸ் நிறுவனத்தின் சீனியர் எச். ஆர் திரு சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது சீனிவாசன் அவர்கள் கூறியதாவது முதலில் இந்த தையல் பயிற்சி மேற்கொண்டு சான்றிதழ்களை பெற வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன் என்றார். மேலும், அவர் கூறியதாவது தயவு செய்து தங்கள் குழந்தைகளை நிச்சயமாக நன்றாக படிக்க வைக்க வேண்டும் அதுவே நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்தாகும் ஒருவருக்கு கல்வி தரமான கல்வி கிடைத்துவிட்டால் அவர்கள் தங்கள் சொந்தக் காலிலேயே நிற்பார்கள் என்றார்.
சான்றிதழ்கள் பெற வந்திருந்த பயனாளிகள் தங்களின் கற்றலின் தையல் பயிற்சியின் அனுபவங்களை அழகாக பகிர்ந்து கொண்டார்கள் எங்களுக்கு இந்த 100 நாள் தையல் பயிற்சி மிகவும் தேவையாக அமைந்தது. தற்போது நாங்கள் வீட்டிலேயே தினமும் இரண்டு அல்லது 3 ஜாக்கெட்டுகளை தைத்து வருமானத்தை ஈட்டுகிறோம். எங்களுக்கு இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இனிய உதயம் தொண்டு நிறத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
செய்தி புகைப்படம்
அல்லாபக்ஷ்
Comments