கடப்பா சிங்கம்

 *Umesh Chandra I.P.S*  

  ( *கடப்பா சிங்கம்)* 


சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றிருந்தபோது அங்கே ஒரு போலீஸ் அதிகாரிக்கு சிலை வைத்து இருந்ததை பார்த்தேன்



 ஆச்சரியமாக இருந்தது.


 அரசியல்வாதிகளுக்கு சிலை உண்டு.

 கவிஞர்களுக்கு ,நடிகர்களுக்கு சிலை உண்டு 


ஏன் ராணுவ வீரருக்கு கூட சிலை உண்டு .


ஆனால் முதல்முறையாக ஒரு காவல்துறை அதிகாரிக்கு சிலையை அங்குதான் பார்த்தேன் .


அவர் யார் என்று விசாரித்தபோது அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் அவர் பெயர் உமேஷ் சந்திரா என்றும் தெரிந்து கொண்டேன்.


ஆந்திர மக்களால் *கடப்பா சிங்கம்* என்று கொண்டாடப் பட்டவர் 


அவரைப் பற்றி பின்னர் விரிவாக படித்து தெரிந்து கொண்டேன்.

.

    கடப்பா மாவட்டத்தில் பல வீடுகளிலும் உமேஷ் சந்திராவின் புகைப்படம் இருக்குமென்றும் மாநிலத்தின் பல காவல் நிலையங்களிலும் அவருடைய புகைப்படம் இருக்குமென்றும் அங்கிருந்தவர்கள் சொல்லக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

அரசு பணியில் நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு எல்லா நிலையிலும் போராட்டம்தான்

 அதிலும் அவர் பணியாற்றிய காவல்  துறை போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தனக்கும் தன் குடும்பத்திற்கு என்றும் யோசித்துப் பார்க்க கூட நேரமில்லாமல் ஒரு வாழ்க்கை அமைந்து விடுகிறது

 கொடுமையான குற்றவாளிகளுடன் மோத நேரிடும்போது அவர்கள் உயிர் அவர்கள் கையில் இல்லை.


நக்சலைட்டுகளை பிடிக்க வேண்டும் என்பதும் சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதும் அவருக்கு அவர் உயர் அதிகாரிகளால் ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட உத்தரவு . ஒரு பொறுப்பான அரசு அதிகாரியாக அந்த உத்தரவை செயல்படுத்ததியதைத் தவிர வேறு எந்த தவறும் அவர் செய்யவில்லை ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்


அவருக்கு முதல் போஸ்ட்  warangal  மாவட்டத்தில்தான் .... 


ஒரு வன்முறைக் கலாச்சாரம் நிறைந்த மாவட்டம் .

அங்கே நக்சலைட்டுகள் தொல்லையும் உண்டு... மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் நக்சலைட்டுகளின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த இவர் நடவடிக்கையில் இறங்கி வெற்றியும் கண்டார்

 warangalல் சிறப்பான பணியை பார்த்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்ற போது அவர் இன்னும் கடினமான மாவட்டமான cuddappaகு எஸ்பி ஆக  பணியமர்த்தம் செய்யப்பட்டார் 


cudappaவுக்கு வெடிகுண்டு தயாரிக்கும் மாவட்டம் என்ற ஒரு கெட்ட பெயரை சினிமாக்காரர்களை  உருவாக்கியிருக்கிறார்கள் !.


(பல படங்களிலும் அந்த மாவட்டத்தைப் பற்றி காட்டும்போது வன்முறை  மாவட்டமாகத்தான் காட்டுவார்கள் ) 

கடப்பாவில்  நக்சலைட்டுகள் மற்றும் சமூக விரோதிகளின் கூட்டமும் அதிகமாக இருந்த மாவட்டம் ...entire district was controlled by anti social elements ..

மக்கள் அரசு நிர்வாகம் மீதும் குறிப்பாக காவல் துறையின் மீதும் பெருத்த அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம் ....


பொறுப்பேற்றுக்கொண்ட பின் இரவு பகலாக அந்த மாவட்டத்தில் அமைதி திரும்ப முழுவீச்சில் இறங்கினார் 


அனைத்து சூதாட்ட கூடங்களும் மூடப்பட்டன .


சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு அவர்கள் கொட்டத்தை அடக்கினார் 

..இதே நேரத்தில் பொதுமக்களையும் காவல் துறையின் செயல்பாடுகளில் இணைத்துக்கொண்டு" மக்கள் ஜாக்கிரதை"  என்ற இயக்கத்தை நடத்தினார் 

பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் குறையை கேட்டறிந்து அதை தீர்த்து வைக்கவும் செய்தார் 


கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கையால் கடப்பா மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் அவர் காவல்துறைக்கு மீட்டுக் கொடுத்தார் 

 சட்டத்தை மீறுவோருக்கு சிங்கமாக எழுந்து நின்றவர், ஏழை எளிய மக்களின் பாதுகாவலராக அவர்கள் மனதிற்கு அன்புகுரியவராகவும்  இவர் ஆகவும் இருந்தார் 

கடப்பா மற்றும் கரீம்நகர் மாவட்டங்களில் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆட்டத்தை முடித்து வைத்தார்  


அங்குதான் இவரை மக்கள் *கடப்பா சிங்கம்* என்று அழைக்க ஆரம்பித்தனர்.

 இவர் அங்கு பணியாற்றிய காலத்தில் தான் முதன் முதலாக அங்கு நேர்மையாக எந்த வன்முறை சம்பவம் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது பிடிக்கவே முடியாது என்று நினைத்த நக்சலைட் இயக்கத்தின் தலைவர்கள் எல்லாம் அடுத்தடுத்து பிடிபட்டனர். 

இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கினார்கள்..


இந்த நேரத்தில்தான் உமேஷ் சந்திரா  கடப்பா மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் .


அவரது இடமாற்றத்தை அறிந்து அதிர்ச்சியுற்ற பொதுமக்கள் சாலை மறியலிலும் போராட்டத்திலும் இறங்கினர் இந்த போராட்டம் வன்முறையாக மாறி பொது சொத்து அடித்து நொறுக்கப்பட்டது ....

இந்த வன்முறையை தூண்டி விட்டவரே. உமேஷ் தான் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை அவருக்கு எதிராக  எதிரிகளால் கிளப்பி விடப்பட , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்....! 


அதன்பின் நீதிமன்ற விசாரணையில் இவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை என தெளிவாக தீர்ப்பளிக்கப்பட்டது

 பணியில் மீண்டும் அமர்த்தப்பட்டு ஹைதராபாத் நகரில் ஒருdummy போஸ்டில் பணியமர்த்தம் செய்யப்பட்டார் 


small cabin with common toilets.


அவருக்கு அங்கு எந்த வேலையும்  கொடுக்கப்படவில்லை .


. எந்த கோப்பும் அவருக்கு அனுப்பப்படவில்லை .


 அதுபோல் தான்  அவமானப்படுத்தப் பட்டதை நினைத்து வருந்திய umesh  ஒரு காலகட்டத்தில் பணியை ராஜினாமா செய்யவும் துணிந்தார்.

 ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்காக பின்வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்து பணியில் தொடர்ந்தார்


 அந்த நேரத்தில் அவருக்கு உரிய வாகன வசதியும் அளிக்கப்படவில்லை  என்பதுடன் அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்த நிலையிலும் கூட அவருக்கு வழங்கப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பும் விலக்கப்பட்டு விட்டது .


செய்வதறியாது தவித்த umesh  அதன் பின் *தன் சொந்த செலவில்* ஒரு பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்..


சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு அதிகாரி தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார் என்பது புரிய வேண்டியவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது


4-09-1999 ....... ஹைதராபாத் நகரில் அலுவலகத்தை நோக்கி தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் 


வாகன ஓட்டியும் தன்னுடைய சொந்த செலவில் அமர்த்திக் கொண்ட ஒரு பாதுகாவலரும் உடன் இருந்தனர் ..


.அன்று பார்த்து, அவர் தன் சொந்தப் பாதுகாப்புக்கான கைத்துப்பாக்கியை வைத்திருக்கவில்லை ....

அந்த நிலையில் ஒரு டிராபிக் சிக்னலில் வண்டி நின்றது 

அவர் காரை திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றிவளைத்தனர் 

முதல் இரண்டு குண்டுகளும் சரியாக ஓட்டுனரையும் ,பாதுகாப்பாளரையும்  பதம்பார்த்து சாய்த்தது.

..

 காரின் கதவை திறந்து கொலையாளிகளை பிடிக்க பாய்ந்த உமேஷிடம் கைத்துப்பாக்கி இல்லை என்பதை  சட்டென உணர்ந்துகொண்ட கொலையாளிகள் (வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை மக்களின் எதிரிலும்) அந்த வீரனை மார்பில் சுட்டு வீழ்த்தினர்


 அங்கேயே சரிந்து இறந்தார் உமேஷ்......


ஒரு நேர்மையான நல்ல அதிகாரி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தீயாய் பரவியது .


கேள்வியுற்ற அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் ...ஹைதராபாத் நகருக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

.

  ஒரு நேர்மையான அதிகாரியை காப்பாற்ற கூட திறன் இல்லாத துறை ஆகிப் போனது அந்த காவல்துறை..


அவர் இறந்த அதே இடத்தில் அவர் சிலையை ஆந்திர அரசு அவரது முதல் நினைவு நாளன்று திறந்தது..


அரசின்  சாதாரன ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை இப்படிப்பட்ட தியாகம் தினம்தோறும்  நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற தீரமிக்க அரசு பணியாளர்களால்தான் நிர்வாகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

26/11 தாக்குதலில் ஈடுபட்ட கசாபை பிடிக்க thukaram omble என்ற காண்ஸ்டபிள் செய்த தியாகத்தை மறக்க முடியுமா? கசாபின் துப்பாக்கியிலிருந்து 40 குண்டுகள் உடலில் பாய்ந்தும் கசாபை விடாமல் பிடித்துக்கொண்டு உயிர் துறந்த மாவீரன் அவர். 

அதே நாள் (அரசு தந்த ) தரமற்ற பாதுகாப்பு கவசத்தை போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி. கசாபின் குண்டுக்கு பலியான போலீஸ் அதிகாரிகள்  Karkare,  Kamte மற்றும். Salaskar போன்றோரைத்தான் மறக்க முடியுமா? 


அவர்களை போன்ற தியாகிகள் ஒரே நாளில் உருவாவதில்லை...


Kamte  வின் மனைவி வினிதா காம்தே *to the last bullet*  என்ற் புத்தகம் எழுதினார். 


அதில் Karkare இன் மனைவி kavitha karkare முன்னுரையில் எழுதியிருக்கிறார்


 *“Martyrs are not made in a day’s fight. It takes an entire lifetime of dedication  and courage to become one* .”


உன்மைதான்.....


---எம், மோகன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி