பார்வதி கிருஷ்ணன் அனைவருக்குமான முன்னுதாரணம். சல்யூட் காம்ரேட்

 


15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தபோதும், சுவரொட்டி, பேனர் என எதிலும் அவரின் பெயருக்கு முன் `தோழர்' என்பதைத் தவிர கட்சிப் பதவியையோ, எம்.பி என்றோ குறிப்பிடக் கூடாது எனக் கண்டிப்புக் காட்டிய பார்வதி கிருஷ்ணனின் சிந்தனை வியப்பளிக்கிறது! உறவுகளைப் பிரிந்து பலகாலம் வாழ்ந்திருக்கிறார். நம் நாட்டு விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பின் மகளிர் மற்றும் தொழிலாளர் நலனுக்காகவும் உணவு, உறக்கத்தைப் பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறார். பலகாலம் கட்சி தந்த உதவித் தொகையைக் கூடப் பெறாமல் கணிதமும் ஆங்கிலமும் கற்றுத் தரும் பயிற்சிப் பள்ளி நடத்தி அதில் வரும் சொற்ப வருமானத்தில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்.

அரசியல் வணிகமயாமாகிவிட்ட இந்தச் சூழலில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என, பார்வதி கிருஷ்ணன் வாழ்ந்து காட்டியிருக்கிறார். உண்மையான புரட்சியாளர்கள் உலகிற்குச் சரியாக அடையாளப்படுத்தப்படுவதில்லை. மக்களோடு மக்களாக, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தோழர். பார்வதி கிருஷ்ணனின் நினைவு தினம் இன்று (20 பிப்ரவரி). இந்திய அரசியலின் கம்பீரமான அடையாளமான பார்வதி கிருஷ்ணன் அனைவருக்குமான முன்னுதாரணம். சல்யூட் காம்ரேட்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி