அமெரிக்கா அவ்வளவு "கெஞ்சியும்".. ரஷ்யாவை எதிர்க்காத இந்தியா!
அமெரிக்கா அவ்வளவு "கெஞ்சியும்".. ரஷ்யாவை எதிர்க்காத இந்தியா! உருவான மாஸ் டீம்?
ரஷ்யாவிற்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
ர்மானத்தை இந்தியா புறக்கணித்து உள்ளது. அதாவது இந்தியா இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை. இந்தியாவின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கின்றன.
உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் புகுந்த ரஷ்யா இன்று காலை உக்ரைன் தலைநகர் கிவ் அருகே சென்றுள்ளது. அங்கு ரஷ்யா - உக்ரைன் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது
ர்மானத்தை இந்தியா புறக்கணித்து உள்ளது. அதாவது இந்தியா இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை. இந்தியாவின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கின்றன.
உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் புகுந்த ரஷ்யா இன்று காலை உக்ரைன் தலைநகர் கிவ் அருகே சென்றுள்ளது. அங்கு ரஷ்யா - உக்ரைன் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது
.ரஷ்யாவின் இந்த போர் உலக நாடுகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று ரஷ்யாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பினர்கள், தற்காலிக உறுப்பினர்கள் ஆகியோர் முன் இன்று இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தது. முறைப்படி இந்த தீர்மானம் இன்று காலை மிக சீக்கிரமாக வந்து இருக்க வேண்டும். ஆனால் இந்த தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை என்று முன்பே அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டது.
அதேபோல் சீனாவும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து தீர்மானத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தரப்பு கொஞ்சம் தீவிரமாக முயன்று இருக்கிறது. கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக அமெரிக்கா இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. இதற்காக தான் முன்மொழிய இருந்த தீர்மானத்தில் கண்டனம் என்ற வார்த்தையை கூட நீக்கிவிட்டு விமர்சனம் என்று மாற்றியது. ரஷ்யாவை போருக்கு எதிராக கண்டிக்காமல் விமர்சிக்கும் வகையில் இந்த தீர்மானம் குறைக்கப்பட்டது.
ஆனால் அப்போதும் கூட இந்த வரைவு தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை என்று அமெரிக்காவிடம் கூறிவிட்டது. ரஷ்யா உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். உக்ரைன் போரை உடனடியாக கைவிட வேண்டும். உக்ரைனில் இருக்கும் படைகளை திரும்ப பெற்று ஆக்கிரமித்த நிலங்களை மீண்டும் கொடுக்க வேண்டும். அதோடு உக்ரைனில் இரண்டு பகுதிகளை ரஷ்யா சுதந்திர இடமாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சம்.அமெரிக்கா அவ்வளவு கெஞ்சியும் இந்த தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை.
அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா நிரந்தர உறுப்பு நாடாக உள்ளது. நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கும். அதாவது டோ அதிகாரம் உள்ள நாடுகள் தங்கள் ஒரே ஒரு வாக்கின் மூலம் மொத்தமாக தீர்மானங்களை முறியடிக்க முடியும். ரஷ்யா இன்று எதிர்பார்த்தது போலவே தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்தது.
சீனா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. சீனாவும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கியது. எனவே மீதம் உள்ள 11 உறுப்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தன. திடீரென.. அமெரிக்காவின் கெஞ்சலுக்கு கூட செவி சாய்க்காமல் இந்தியா இப்படி ரஷ்யாவிற்கு எதிராக செயல்படாமல் ஒதுங்கியது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்தியா எங்கே ரஷ்யா - சீனாவுடன் டீம் போடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது
சீனா தனது விளக்கத்தில் , உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது. பிற நாடுகளின் ராணுவ விரிவாக்கம் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது என்று கூறி நேட்டோவை விமர்சனம் செய்து ரஷ்யாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறது. அதாவது ரஷ்யா தனது பாதுகாப்பிற்காகவே இப்படி செய்வதாக சீனா கூறியுள்ளது. ஆனால் இந்தியா அப்படி சொல்லவில்லை. இந்தியா இதற்கு வேறு காரணம் சொல்லி இருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருக்கவே விரும்புகிறது.
இந்தியா விளக்கம் இந்தியா கூறிய விளக்கத்தில், இந்தியா எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ரஷ்யாவுடன் உள்ள பாரம்பரிய உறவை பேணும் வகையிலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளிடம் உள்ள நட்பை காக்கும் வகையிலும் நாங்கள் இங்கு வாக்களிக்கவில்லை என்று இந்தியாவின் டிஎஸ் திருமூர்த்தி கூறியுள்ளார். இதன் அர்த்தம் இந்த முறையும் இந்தியா அணி சேரா நாடாக இருக்கும். இந்தியா இந்த முறையும் எந்த பக்கமும் சாயாமல் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது..
நன்றி
Comments