அண்ணன் தம்பி
கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்து பேசினோம். நேற்று இரவு அவர் என்னை சந்திக்க வேண்டும் என அழைப்பு வந்ததும் உடனே கிளம்பி விட்டேன். என் உடல் நலன் குறித்தும் வேலைகள் குறித்தும் விசாரித்தார். 'இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்து விட்டோம், இனிமேலும் என்ன என தோன்றியது! அதனால்தான் அழைத்து பேசினேன்' என்று அண்ணன் சொன்னார்.
நானும் இதற்காகதான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக பேசினோம். பிறகுதான் அங்கிருந்து கிளம்பி வந்தேன்.
இடையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். அது குறித்து எல்லாம் விசாரித்தார்.
நானும் அவரும் அண்ணன் தம்பி என்பதை எல்லாம் தாண்டி நல்ல நண்பர்களாகதான் இருந்தோம்.
அந்த நட்பு போய் விட்டதே என்றுதான் இத்தனை காலம் வருந்தினேன்.
அது மறுபடியும் கிடைத்ததில் மகிழ்ச்சி. முன்பெல்லாம் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை பார்த்த காலத்தில் அவர் இசையமைத்து விட்டு சில வேலைகளை எனக்கும் ஒதுக்கி பார்த்து கொள்ள சொல்வார்.
அந்தப் பணிகள் இனி வரும் காலங்களிலும் தொடரும். இனிமேல் இருவரும் இணைந்து நிச்சயம் வேலை பார்ப்போம். இறைவனுக்கு இந்த சமயத்தில் நன்றி"
- கங்கை அமரன்
நன்றி: பிபிசி தமிழ்
Comments