முக்கோண மனிதன்'/கவிதைகளின் தொகுப்பு.
வணக்கம்.
'முக்கோண மனிதன்'
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு இதழ்களிலும் முகநூலிலும் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. புதியவை சிலவும் உண்டு.
இந்த ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் படப்பிடிப்புப் பணிகளின் காரணமாக இறுதிகட்ட வேலையை செய்ய இயலவில்லை.
ஆகவே இந்நூல் 2022 ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இருநூறு பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. டெம்மி சைஸ். என் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம் ' தொகுதியைப் போன்ற அளவில் இருக்கும்.
முன்பதிவு செய்ய விருப்பமுள்ள நண்பர்கள் புத்தகத்தின் விலை 200/- (இரு நூறு ரூபாய் மட்டும்) புத்தக கண்காட்சியில் 'டிஸ்கவரி புக் பேலஸில்' நேரிலோ அல்லது கீழ்கண்ட டிஸ்கவரி புக் பேலஸ் Gpay எண்ணிலோ முன் பணம் செலுத்தினால் அஞ்சல் செலவு இன்றிப் புத்தகம் வீடு தேடி வரும்.
ஒரே ஒரு புத்தகம் முன்பதிவு ஆனாலும் கூட இத்தனை நாள் நான் எழுதியதற்கு பெருமைப்பட்டுக் கொள்வேன்.
நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
- பிருந்தா சாரதி
முகப்பு: Lark Bhaskaran
📴 GPay, Phone Pay 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: +𝟗𝟏 – 99404 46650
ஆர்டர் செய்தவர்கள் மறக்காமல் *9940446650* என்ற எண்ணிற்கு வாட்சப் அனுப்பி உறுதிபடுத்தவும்.
Comments