குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே முதலிடம்
இன்றோடு நிறைவுபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இம்முறை 16 தங்கப் பதக்கங்களை வென்ற நோர்வே, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே முறையில் அதிக தங்கம் வென்ற நாடு என்ற சாதனையையும் நிலைநிறுத்தியுள்ளது. கடந்தமுறை 14 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 39 பதக்கங்களை வென்ற நோர்வே இம்முறை மொத்தமாக 37 பதக்கங்களை வென்று உலகின் அனைத்து ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது.
இரண்டாம் இடத்திலுள்ள ஜேர்மனி 12 தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்றது. அடுத்த இடங்களில் சீனா (9 தங்கம்), அமெரிக்கா, சுவீடன், நெதர்லாந்து ((8 தங்கம்) என்பன உள்ளன. ரஷ்ய அணி 32 பதக்கங்களை வென்றபோதும் ஆறு தங்கப்
பதக்கங்களை மட்டுமே பெற்றதால் ஒன்பதாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற பெருமையும் நோர்வேக்கு உண்டு. 368 பதக்கங்கள் (132 தங்கம்) பெற்ற நோர்வேக்கு அடுத்ததாக ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, சோவியத் யூனியன் என்பன உள்ளன.
54லட்சம் பேரை மட்டுமே சனத்தொகையாய்க் கொண்ட இந்தச் சிறிய நாட்டால் எவ்வாறு இப்படிச் சாதிக்க முடிகிறது என்பது விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட பலரும் அறியவேண்டிய ஒரு பாடம்.
சாதித்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!
பதிவு: Thiagarajah Wijayendran
செய்தி பகிர்வு
கவிதாலட்சுமி (நார்வே)
Comments