"உங்களில் ஒருவன்" மு.க ஸ்டாலினின் சுயசரிதை
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையான "உங்களில் ஒருவன் (பாகம் 1)" வெளியீட்டு விழா, நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில், இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை 1967ஆம் ஆண்டு, அவரது பதினான்காவது வயதிலேயே தொடங்கி விட்டது. ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தை ஸ்டாலின் பெற்றிருக்கிறார். முதலமைச்சர் அவ்வளவு சாதாரணமாக இந்த பதவிக்கு வந்துவிடவில்லை. பல சவால்களை சந்தித்த பின் தான் இந்த பதவிக்கு வந்துள்ளார். "உங்களில் ஒருவன்" சுயசரிதையைப் படிப்பதன் மூலம் அவரது போராட்டங்களைப் பற்றி மேலும் அறியலாம்.
இந்த விழாவில், நடிகர் சத்யராஜ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். எங்கள் "புரட்சித் தமிழன்" அவர்கள் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சத்யராஜ் அவர்களின் குரல் ஒலிப்பது என்பது பெருமைக்குரியது. புரட்சித் தமிழனின் வாழ்க்கைப் பயணத்தில் இந்தப் பெருமைக்குரிய தருணத்தை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இந்த வேளையில், தமிழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் நிர்வாக பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். பொதுமக்களின் குரலைக் கேட்க உங்கள் நேரத்தை ஒதுக்குகிறீர்கள். உங்கள் தலைமை தமிழகத்தின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லட்டும்.
வாழ்க 🙏 வளமுடன்
ராஜ் குமார் மலேசியா
Comments