ஒரு காதல் என்ன செய்யும்..
ஒரு காதல் என்ன செய்யும்..
காதலிப்பவர்கள் காதலைப் பற்றி எழுதுவதில்லை.
எழுத்தில் வெளிக்காட்டியதில்லை.
காதலை துறந்தவர்கள்,
காதலிலிருந்து மீண்டவர்கள்,
காதலை துரத்தியவர்கள்,
காதலை வெறுத்தவர்கள் தான் எழுதுகிறார்கள்.
பேசுகிறார்கள்.
தூற்றுகிறார்கள்.
ஒரு பரிச்சுத்தமான காதல் என்ன செய்யும்...
அன்பு செய்யும்.
வேறென்ன செய்யும்.
அன்பு மட்டுமே செய்யும்.
அதற்கு வேறு எந்த கருகூந்தலும் தெரியாது.
அன்பு மட்டுமே செய்யும்.
கண்ணீர்
வலி
வேதனை
துயர்
பிரிவு
ஊடல்
சண்டை
பிரச்சினை
அது இது எல்லாம் அதன் உடன்பிறந்த சகோதரர்கள்.
காதல் இருக்குமிடத்தில் இதுவும் இருக்கும்.
இதுவும் வரும்.
இதுவும் வைத்து செய்யும்.
அனுபவித்துதான் ஆகவேண்டும்.
இறக்க தானே போகிறோம்.
ஏன் பிறக்கிறோம் என்பது போல வலிதானே தருகிறது காதல்.
அப்புறம் ஏன் அதை தொட வேண்டும் என்பது தான் இது.
கோடிக்கணக்கான அன்பு கொண்ட நெஞ்சங்கள் இதில் இணைந்திருக்கிறது.
காதலை காதலாக நேசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
காதலை தவிர்த்து மற்றதை காதலாக ஏற்ப்பவர்கள் தோற்கிறார்கள்.
அவ்வளவு தான்.
காதலுடன்
Comments