சமையலறையில் சின்னச்சின்ன பயனுள்ள 7 வீட்டுக் குறிப்புகள்.

 நன்றாக சமைத்தால் மட்டும் போதுமா. சமையலறையில் சின்னச்சின்ன நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சமையலில் எப்போதுமே நான் தான் பலே கில்லாடி என்று சொல்லிக் கொள்வதில் பெண்களுக்கு ஒரு பெருமை. அப்படி உங்கள் வீட்டு கிச்சனில் நீங்கள் ராணியாக இருக்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை உங்களுக்கு தெரியாதா பயனுள்ள 7 வீட்டுக் குறிப்புகள்.



1

நம் வீட்டு சமையல் அறை, குளியல் அறை அல்லது வேறு எந்த இடத்தில் டிரம்மில் அல்லது தொட்டியில் நல்ல தண்ணீரை பிடித்து மூடி வைத்திருந்தாலும், திறந்து வைத்து இருந்தாலும் அதில் சில சமயம் குட்டி குட்டி பூச்சிகள், புழுக்கள் வரத் தொடங்கிவிடும் அல்லவா. அது வராமல் இருக்க என்ன செய்வது. ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 லிருந்து 15 மிளகுகளை போட்டு நூலில் இருக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை தண்ணீர் தொட்டியில், டிரம்மில் போட்டு வைத்தால் அந்த தண்ணீரில் நீண்ட நாட்களுக்கு புழு பூச்சிகள் வராமல் இருக்கும். இந்த முடிச்சுக்கு ரப்பர் பேண்ட் பயன்படுத்தக்கூடாது. ரப்பர் பேண்ட் தண்ணீரில் ஊறிக் கொண்டே இருந்தால் அதுவும் பிசுபிசுப்பு தன்மையை கொடுத்துவிடும்.


 2: உங்கள் வீட்டில் ஊறுகாய் வாங்கி ரொம்ப நாட்களாகி ஆகிவிட்டால் அதனுடைய சுவை மாறி விடும். நல்லெண்ணெயை நன்றாக சூடு செய்து பழைய ஊறுகாயில் ஊற்றினால், அந்த ஊறுகாய் புது ஊறுகாயாக மாறி நல்ல சுவையைக் கொடுக்கும். Tip 3: உங்கள் வீட்டில் தயிர் ரொம்பவும் புளித்து விட்டால் இனிமே அதை தூக்கி கீழே கொட்டாதீர்கள். புளித்த தயிர் கொஞ்சம், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து உங்கள் காலில் இருக்கும் பழைய கொலுசை அந்த தயிரில் 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு பிரஷ் போட்டு, தேய்த்து கழுவினால் கொலுசு பலீச்சுனு மாறும்.

3 உங்கள் வீட்டில் தயிர் ரொம்பவும் புளித்து விட்டால் இனிமே அதை தூக்கி கீழே கொட்டாதீர்கள். புளித்த தயிர் கொஞ்சம், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து உங்கள் காலில் இருக்கும் பழைய கொலுசை அந்த தயிரில் 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு பிரஷ் போட்டு, தேய்த்து கழுவினால் கொலுசு பலீச்சுனு மாறும்.

4 காலையில் செய்த பொட்டுகடலை சட்னி 2 குழிக்கரண்டி மிச்சம் ஆகிவிட்டதா. ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார்களா. ராத்திரி பணியாரம் மாவில் அந்த 2 குழிக்கரண்டி சட்னியையும் ஊற்றி கலந்து அதன் பின்பு பணியாரம் செய்து பாருங்கள். வித்தியாசமான அசத்தலான சுவையில் பனியாரம் கிடைக்கும்.

5பிரிட்ஜில் நீண்ட நாட்களாக பிரட் துண்டுகள் இருந்து ட்ரை ஆகிவிட்டதா. இட்லி பாத்திரத்தில் இட்லி வேகவைப்பது போல, ஆவியில் பிரெட் துண்டுகளை வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதும். பிரெட் துண்டுகள் பிரஷ்ஷாக மாறிவிடும்.


6

உங்க வீட்ல ரேஷன் கடையில் வாங்கிய துவரம்பருப்பை பயன்படுத்த மாட்டீங்களா. அதன் சுவை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காதா. 1 கப் ரேஷன் துவரம்பருப்பு, 1 கப் கடையில் வாங்கிய துவரம் பருப்பு, சேர்த்து சாம்பார் வைத்து பாருங்கள். நிச்சயமாக அந்த சாம்பார் அத்தனை சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. 

 7: இளசான பீன்சை வாங்கியவுடன் இரண்டு பக்கம் இருக்கும் காம்பை நாரோடு உரித்து விட்டு, அதன் பின்பு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் பீன்ஸ் முத்தி போகாமல் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி