*வெந்நீரில் குளிப்பவர்களை கண்ணீரில் தள்ளும் உடல் நலப் பிரச்சனைகள்.*

 *




*வெந்நீரில் குளிப்பவர்களை கண்ணீரில் தள்ளும் உடல் நலப்  பிரச்சனைகள்.*



மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது. இது முடியை வலுவிழக்காமலும் உடையாமலும் பாதுகாக்கிறது. ஆனால் வெந்நீரில் குளித்தால், முடி வலுவிழந்து உடையும். இதன் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஆண்களுக்கு வழுக்கையையும் உண்டாக்கும்.


வெந்நீரில் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது. மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம்


வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்னை ஏற்படும். இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம்.


குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும். அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும்.


குளிர்காலத்தில் சூடான தண்ணீர் குளிக்க விரும்பும் அதே நேரத்தில், பக்க விளைவுகளை தவிர்க்க, நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடல் நல பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


குளிர்ந்த நீர் குளியல்:

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் விழிப்புஉணர்வு அதிகமாகும். நமது சுவாசம் ஆழமாக, நிதானமாக இருப்பதால், நம் கவனத்திறன், சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. செயல் வேகம் அதிகரிக்கிறது.

ஜலதோஷம் வராமல் உடலைப் பாதுகாக்கும் . குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.

மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது.

உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி, நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கு வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பதால், இந்தப் பணி சீராக நடக்கிறது.

மூளை, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் .

சருமத்தை இறுகச்செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போடும் .

தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் நம் கூந்தலைப் பாதுகாக்கிறது. குளிர்ந்த நீர் அதைத் தலையில் இருந்து முற்றிலும் நீக்காமல் பாதுகாப்பதால், தலை முடி உதிராமல் இருக்கும் .

கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.



*பகிர்வு*


*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி