பனைகிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

 பனைகிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?





பனை விதைகள் முளைக்கும் போது நிலத்திற்குள்ளாக செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டு கிழங்கு உருவாகின்றது.



அப்படி உருவாகும் கிழங்கு தான் பனைகிழங்கு. இதனை பனங்கிழங்கும் என்றும் கூறுவார்கள். பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் முதலில் விதைகளை சேமித்து வைத்துக் கொள்வார்கள். அதன் பிறகு உரிய காலத்தில் மண்ணைக் கொண்டு மேடை போன்று அமைத்து அதில் பனை விதைகளை தூவி விடுவார்கள். விதை முளைத்து கிழங்கு வந்த பிறகு அதனை அப்படியே தோண்டி எடுத்து பயன்படுத்துவார்கள். இந்த பனங் கிழங்கானது வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.


பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:


அற்புதமான மர வகைகளில் ஒன்று பனைமரம். இது, மலச்சிக்கலை போக்கும்.

உடலுக்கு வலு சேர்க்கும். இதிலுள்ள இருப்புச் சத்து கர்ப்பப்பையை வலுவடையச் செய்கிறது.

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. புற்றுநோயை தடுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரபியை தூண்டுகிறது.

இதில், புரதச்சத்து மிகுந்துள்ளது.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகிறது.

பனங்கிழங்கில் ஒமேகா - 3 பேக்ட்டி ஆசிட்டி நிறைந்துள்ளது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்கிறது.

குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்து உணவு.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிடைக்கும்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம் பழம், பனை வெல்லம், பனை கல்கண்டு, பதனி, பனை கிழங்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

பனை கிழங்கில் கால்சியம் சத்து அதிகளவில் உள்ளது. இது வலுவான எலும்புகளை உருவாக்கவும், பற்களை உருவாக்கவும், எலும்பு கோளாறுகளை சரிசெய்வதுடன், தசை சுருக்கங்களை தடுக்கிறது.




பகிர்வு


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி